Friday, March 12, 2010

வெட்டி பொழுது ...

வெகு நாட்களுக்கு பிறகு இன்று office க்கு அரை நாள் மட்டம் போட்டேன்.
என்ன செய்வது என்று தெரியாமல் கணினி யை மேய்ந்தேன் . எல்லாம் சலித்து விட இதோ இங்கே ...


கடைசியாக நீங்கள் எப்பொழுது சிட்டு குருவியை பார்த்தீர்கள் ?

அவை அழிந்து கொண்டிருக்கின்றன . காரணம் பல .
1. unleaded பெட்ரோல் . அவை வெளி இடும் புகை சிறு பூச்சிகளை
கொன்று விடுமாம் . அந்த பூச்சிகளை சாப்பிடும் குருவிகளும் .....

2. மொபைல் டவர்கள் .. அவற்றின் காந்த அலைகள் குருவியின் முட்டைகளை அழித்து விடுமாம் . இன பெருக்கத்துக்கு வழி இல்லை ...

3. முன்பு போல் குருவிகள் வீடுகளில் கூடு கட்டுவது இல்லை .. காரணம் அவை உண்பதற்கு தானியங்கள் வீடுகளில் கிடைப்பதில்லை ...


எனவே நண்பர்களே ,முடிந்தால் ஒரு சிறிய கை அரிசியை குருவிக்கு கொடுங்கள்... மற்றவற்றை நம்மால் என்ன செய்ய முடியும் ?

Monday, June 29, 2009

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.

Wednesday, June 17, 2009

PHOTOGRAPHY

எனக்கு புகைப்படம் எடுப்பதில் சிறிய வயதிலேயே நிறைய ஆர்வம் உண்டு எனக்கென்று கேமரா எதுவும் கிடையாது . நண்பர்களிடத்தில் கடன் வாங்கி
போட்டோ எடுத்து விட்டு பிரிண்ட் போடுவேன். வீட்டு பொருளாதார சூழ்நிலை
மற்றும் என்னுடைய ஆர்வம் யாருக்கும் தெரியாத நிலையில் அவ்வவ்போது
இது தொடர்ந்து கொண்டே இருந்தது . என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்
எனது தந்தை ஒரு olympus camera வாங்கினார். எனக்கு பயங்கர சந்தோசம் .
ஆனால் நானோ சென்னையில் , camera நெல்லையில். ஆனாலும் நெல்லை
செல்லும் போதெல்லாம் குறைந்தது 2 ரோல்கள் எடுக்காமல் செல்ல மாட்டேன் .
ஒரு கட்டத்தில் என் தந்தை நான் நெல்லை சென்றாலே பயப்பட ஆரம்பித்தார் .
ஏனென்றால் ஒரு ரோல் 250ரூபாய் என்றால் இரண்டு ரோல் .......! பொறுப்பான
பிள்ளை அல்லவா நான் . நானே ஒரு கட்டத்தில் என் ஆர்வத்தை கட்டுப்படுத்தி
கொண்டேன் . எனது தந்தைக்கு பரம மகிழ்ச்சி மகன் திருந்தி விட்டான் என்று .
ஆனால் புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் எள்ளளவும் எனக்கு
குறையவில்லை . நானே எனது சொந்த பணத்தில் ஒரு camera வாங்க தருணம்
பார்த்து கொண்டே இருந்தேன் . ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை
அந்த தருணம் வரவே இல்லை . காரணம் நான் வேலைக்கே செல்ல
வில்லையே. ஒரு வழியாக LIC வேலை கொடுத்தது . முதல் மாத
சம்பளத்திலேயே ஒரு camera வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தேன் .
நண்பர்களிடத்தில் என்ன camera வாங்குவது என்று தீவிர ஆலோசனை .....
எனக்கு photographyயில் ஆர்வம் இருந்த அளவுக்கு cameraக்கள் பற்றி எதுவுமே
தெரியாது . எனவே பலரும் பல camera க்களை பரிந்துரை செய்ய குழப்பம்தான்
மிச்சம் . ஒரு வழியாக sony வாங்கலாம் என்று முடிவு செய்த பொழுது
என்னுடைய வேலை முட்டுகட்டையாக வந்து நின்றது ( development officer in LIC).
என்னுடைய சம்பளத்தை வீட்டிற்கும் கொடுக்கவில்லை நானும்
அனுபவிக்கவில்லை . முகவர்களை நியமனம் செய்யவே சரியாக இருந்தது .
பொறுமை பொறுமை பொறுமை என்று எனக்கு நானே சமாதானம் செய்து
கொண்டேன் .இடையில் திருமணம் வேறு . ஒரு வழியாக பணி நிரந்தரம்
செய்யப்பட்டேன் . சரி எடுத்த செயல் நிறைவேற்று என்று மனம் கூறியது .
நானும் என் மனைவியும் பட்ஜெட் போட்டோம், camera பட்ஜெட். பத்தாயிரம்
என்று முடிவானது. சொந்த பணத்தில் camera கனவு நனவாக போகின்ற சமயம் ...
மனைவியின் தங்கை போன் செய்தாள் " அத்தான் உங்கள் கல்யாணத்துக்கு
நான் எந்த பரிசும் தரவில்லை . ஒரு camera வாங்கி தரலாம்னு நினைக்கிறேன்."
ஆஹா , நம்ம சொந்த பணத்தில் camera வாங்க கொடுத்து வைக்கவில்லையோ
என்று எண்ணி கொண்டே கடை சென்றோம் . canon ixus 80 is இப்போது கையில்.
இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்தால் உங்கள் காதில் விழும் முதல்
வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் " ஏன்தான் என் தங்கச்சி உங்களுக்கு camera வாங்கி கொடுத்தாளோ. எப்ப பார்த்தாலும் காமெராவும் கையுமாக.....

Sunday, May 24, 2009

தாய்

எனது முதல் வணக்கம்.
முதல் நாள் , முதல் சிந்தனை . தாயைபற்றி இருக்கட்டுமே . எனது தாய் எனக்கு பெரிதாக எதையும் கற்று தரவில்லை , மற்றவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தன் வாழ்க்கை மூலம் சொல்லி கொடுத்ததை தவிர .....

மீண்டும் சந்திப்போம் .